
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யார் என தனக்கு தெரியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கம்பஹாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரிகள் சிலர் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தொடர்பு கொண்ட அதிகாரிகள் “மேடம் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையா?” எனக் கேட்டுள்ளனர்.
“யார் அது? எனக்கு மஹிந்தவை மாத்திரமே தெரியும். கோட்டாபயவை தெரியாது.
எனினும் இதற்கு பின்னர் எங்களிடம் பேசவும் நீங்கள் அனுமதி பெற வேண்டிய நிலைமை ஏற்படும்” என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply