
தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடைசியாக வெளியான படம் NGK. ஹிந்தியில் அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.
அண்மையில் இவர் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரிடம் கூட நடித்த நடிகர்கள் மேல் காதல் ஏற்பட்டுள்ளதா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், என்னிடம் ஒரு நடிகர் காதலை வெளிப்படுத்தினார், மிகவும் அழகான முறையில் சொன்னார்.
முதலில் எனக்கு அதில் விருப்பம் இல்லை, முதல் முறையே காதல் வரும் என நினைக்கவில்லை.
பின் இதுகுறித்து தோழியிடம் கூறியபோது, என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக புரிந்துகொள் என்றார். பிறகே நான் அவரிடம் இதற்கு எனக்கு நியாயமில்லை, நான் பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
Leave a Reply