
எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றின் பதவிகளுக்கான நியமனங்கள் செய்யப்பட உள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக தெரியவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 70(1) ஷரத்திற்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் நாடாளுமன்றத்தின் கூட்டங்களை நிறுத்தி வைக்க முடியும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் மற்றும் தெரிவுக்குழுக்கள் என்பன இரத்தாகிவிடும். நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என்பதுடன் தெரிவுக்குழுக்களும் நியமிக்கப்படும்.
தெரிவுக்குழுவின் அதிகாரங்களை ஆளும் கட்சி பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply