
நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் சிரேஸ்டதுவத்திற்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமருக்கு உரித்தான ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்களுக்கான ஆசனங்கள் சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் அமரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆசனங்கள் அனைத்தும் கட்சி சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply