
கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தளமான தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட அவர், மஹா நாயக்கர்களை சந்தித்து அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று காலை நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply