
பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இரு பார ஊர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் காயமடைந்த நால்வர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் குருணாகலில் இருந்து பயணித்த வாகனமும் யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமுமே ஒன்றோடொன்று மோதியுள்ளது.
யாழிலிருந்து பயணித்த வாகன சாரதி நித்திரையில் வீதியின் மறுபுறத்திற்கு வாகனத்தை செலுத்தியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
படுகாயமடைந்தோரில் மூவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலும், ஒருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply