
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவிற்கு கடிதம் எழுதிய இளைஞருக்கு அவரிடமே உதவியாளர் பணி கிடைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவரைபோல், பல பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இளைஞர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் அவர்களிடம் ஒரு வேலை கிடைக்காதா என்று ஏங்குவது உண்டு.
அதே கனவோடு இருந்தவர்தான் மும்பையை சேர்ந்த சாந்தனு என்ற இளைஞர். அவர் தற்போது ரத்தன்டாடவின் உதவியாளராக உள்ளார்.
இது குறித்து பேசிய சாந்தனு. நான் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு டாடா குரூப்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஒருநாள் மாலை வேலை முடித்து வீடு திரும்பு வேளையில், வாகனத்தில் அடிப்பட்ட ஒரு நாயை பார்த்தேன். அது இறந்திருந்தது. அந்த மாலைபொழுதியில் முடிவு செய்தேன். நண்பர்களுடன் இணைந்து நாய்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ஒளி எதிரொலி பெல்ட் ஒன்றை கண்டு பிடித்தோம்.
முதலில், சில தெருநாய்களுக்கு அதை கட்டிவிட்டோம் நல்ல பலன் கிடைத்தது. நாங்கள் கண்டுபிடித்த பெல்ட் விஷயம் காற்றில் பறந்து டாடா குழுமம் வரை சென்றது. பின்னர் நிறைய பேர் தானாக எங்களிடம் வந்து பெல்ட் வேண்டும் எனக் கேட்டனர். அந்த நேரத்தில் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக்கொள்ள போதுமான பணம் இல்லை.
அதனால் டாடா குழுமத் தலைவரிடம் உதவி கேட்டு ஒரு கடிதம் எழுதுமாறு என் தந்தை கூறினார். முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது, பின்னர் தைரியமாக கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன்.
கடிதம் எழுதிய இரண்டு மாதங்களித்து எனக்கு பதில் கடிதம் வந்தது. அதில் ரத்தன் டாடாவின் கையொப்பம் இட்டு அவரே கைப்பட பதில் எழுதியிருந்தார்.
அதில், என்னுடைய கடிதத்தை பார்த்து வியந்ததாகவும், என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். சந்திப்பின் போது என்னை பார்த்து ஆச்சரியபட்ட அவர் நாய் பெல்ட் குறித்து பெருமையாக பேசினார்.

அவரைச் சந்தித்த பிறகு என் பட்ட மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டேன். ஆனால், அவரிடம் நான் ஒன்று கூறினேன், `என் படிப்பு முடிந்த பிறகு டாடா நிறுவனத்துக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பேன்’ என்றேன்.
அவரும் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். படிப்பை முடித்து இந்தியா வந்த பிறகு ரத்தன் டாடாவே எனக்கு நேரடியாக அலைப்பேசியில் அழைத்து பேசினார். அப்போது, ‘எனக்கு நிறைய வேலைகள் உள்ளன, நீ என் உதவியாளராக இருக்க முடியுமா?’ எனக் கேட்டார். அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை சில விநாடிகள் மௌனத்துக்குப் பிறகு `சரி’ என்றேன்.
எனது வயதினர் சரியான நண்பர், வழிகாட்டி, பாஸ் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மூவரும் ஒருவராக ரத்தன் டாடா கிடைத்துள்ளார். என் அதிர்ஷ்டத்தை என்னாலே நம்பமுடியவில்லை” என நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார் சாந்தனு.

Leave a Reply