ரயில் துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது – மத்திய அரசு

ரயில்வேயின் சில சேவைகள் மட்டுமே தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையின் அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதே மத்திய அரசின் விருப்பம் எனவும் இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகளை தனியார் நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், அதன்மூலம் பயணிகள் பலனடைவார்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *