
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பந்த், 2019-20 சையத் முஷ்டாக் அலி சூப்பர் லீக் தொடரில் டெல்லி அணியில் விளையாடவுள்ளார். நவம்பர் 24ம் திகதி ஹரியானா அணிக்கு எதிரான போட்டியிலும், நவம்பர் 27ம் திகதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணிக்காக பந்த் விளையாடவுள்ளார்.
இதில், டெல்லி அணி வெற்றிப்பெற்றால் தொடர்ந்து நடக்கும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் ரிஷப் பந்த் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் சையத் முஷ்டாக் அலி தொடருக்காக விடுவிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி விக்கெட கீப்பராக சஹா செயல்படவுள்ளார். கூடுதலாக பந்த்திற்கு பதிலாக ஆந்திரா விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத் வங்கதேச அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
Leave a Reply