
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினரின் 2019ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் நிதியில் இருந்து விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகளுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்க அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார், கார்த்தி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், விளையட்டுக்கழக உறுப்பினர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply