
மங்கள சமரவீர மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் பௌத்த தர்மத்திற்கு நிந்தனை செய்ததன் காரணமாகவே பௌத்த பிக்குமார் பௌத்த பீடங்கள் தொடர்பான பேதமின்றி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக இணைந்ததாக அமெரிக்காவின் பிரதான சங்க நாயக்கர் வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்காக நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், மங்கள மற்றும் ரஞ்சன் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக பௌத்த பிக்குகள் பௌத்த சாசனத்திற்காக ஒன்றாக இணைந்தனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply