
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தென் இலங்கையில் வீதி பெயர்ப் பலகையிலிருந்து தமிழை நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
குறிப்பாக கடந்த வாரம் பாணந்துறை நகரசபை எல்லைக்குற்பட்ட பகுதியில் உள்ள சுசந்த மாவத்தை வீதிப் பெயர்ப் பலகையிலிருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டது.
இதனை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது வத்தளை – கெரவலப்பிட்டி வீதியின் தமிழ் மொழிப் பலகையும் உடைத்தெறிந்து வீசப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள வீதிப் பெயர்ப்பலகைகள் 3 மொழியிலும் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், ஜனாதிபதி தேர்தலை அடுத்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
எனவே புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply