
விராட் கோஹ்லி பிறப்பதற்கு முன்னதாகவே இந்திய அணி வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதாக இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன் பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்திலிருந்து தொடங்கியது என கூறினார்.
இதற்கு தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், 1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளிலே இந்தியா வெளிநாட்டில் வெற்றிகளை குவித்தது, அப்போது விராட் கோஹ்லி பிறக்கவே இல்லை என கூறினார்.
மேலும் பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி குறித்து சிறப்பானதை பேசுவதற்காக கோஹ்லி இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
Leave a Reply