
அயோத்தி பிரச்சினை சர்ச்சையானதற்கு காங்கிரஸே காரணமென பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி தான் முக்கியம் என்றும் அதை பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டதால் நாட்டை சீரழித்து விட்டனர் என்றும் பிரதமர் மேலும் சாடியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தல்தோன்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜார்கண்ட் மாநிலம், குறிப்பாக பாலாமு பகுதி பா.ஜ.க.வின் வலுவான கோட்டையாக விளங்குகிறது. தற்போது நாடு முழுவதும் தாமரை மலர்கிறது என்றால் அது இங்குள்ள மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் ஆசிகளால்தான்.
இப்பகுதி மக்கள் எப்போது தாமரையின் பக்கமே நிற்கிறார்கள். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்தது ஜார்கண்டிற்கு மிக முக்கியமானது. அதனால்தான் வலிமையான, நிலையான அரசு இங்கு அமைக்க முடிந்தது.
பா.ஜ.க.வின் முயற்சியாலேயே ஜார்கண்ட், நக்சல் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதுடன், அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply