
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பௌத்த மதகுருமார் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன்.
ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய, குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்.
எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply