
டிப்ஸ் 1 :-
முதலில் தக்காளியை நன்கு அரைத்து கொண்டு, வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் கொதிக்க வைத்த க்ரீன் டீ நீரை சேர்த்து கலக்கவும். பின்னர் 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும். இப்போது, 5 நிமிடம் முகத்தை ஆவி பிடித்து விட்டு இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள். ஏன் ஆவி பிடிக்க வேண்டுமென்றால், முகத்தில் உள்ள துளைகள் விரிவடைந்து இந்த ஃபேஸ் பேக் தாக்கம் அதிகரிக்கும். மேலும் இது முகத்தை பொலிவாக மாற்றும்.
டிப்ஸ் 2 :-
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க வேண்டுமா..? இதோ இந்த அழகு குறிப்பு போதும்ங்க..!
2 டீஸ்பூன் தக்காளி சாறு, 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவும். பிறகு வட்டமான விசையில் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இந்த அழகு குறிப்பு முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி பளபளப்பை தரும். அத்துடன், எலுமிச்சையில் உள்ள வைட்டமின்- சி முகத்திற்கு ஒரு நல்ல ப்ளீச்சாக பயன்படும்.
டிப்ஸ் 3 :-
ஒரே இரவில் வெண்மையாக மாறி, உங்கள் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கனுமா..? அதற்கு இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்ங்க… துவரம் பருப்பை ஊற வைத்து அரைத்து கொள்ளவும், பின் அதனுடன் அரிசி மாவு, அரைத்த ஆரஞ்சி பழ தோலை சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு முல்தானி மட்டி, எலுமிச்சை சாறு,தேன் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த அழகு குறிப்பு உங்கள் முகத்தை மிகவும் மென்மையாகவும், வெண்மையாகவும் மாற்றும்.
டிப்ஸ் 4 :-
முக பருக்கள் இல்லாத முக வேண்டுமா..? அதற்கு 2 டீஸ்பூன் அரிசி மாவு, 2 டீஸ்பூன் தயிர், சிறிது சோடா உப்பு ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து முகத்தில் பூசவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். சோடா உப்பு முக பருவை போக்க நன்கு உதவும். மேலும் முகத்தையம் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்யும்.
டிப்ஸ் 5 :-
கதாநாயகனை போல முக அழகை பெற இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள். முதலில் ஒரு தக்காளியை பாதியாக அரிந்து, ஒரு பாதியை மஞ்சளை பூசி முகத்தில் மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடம் கழித்து இதனை கழுவி விடுங்கள். அடுத்து இன்னொரு பாதியை எலுமிச்சை சாறு கலந்த சர்க்கரையை தடவி முகத்தில் பூசவும். இது முகத்தில் உள்ள எல்லா வகையான அழுக்குகளையும் அகற்றி சுத்தமான சருமத்தை ஏற்படுத்தும். அத்துடன் முகம் மினுமினுவென மின்னும்.
டிப்ஸ் 6 :-
ஆண்கள் பலருக்கு இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த சுருக்கங்கள்தான். அழகான முகத்தையும் இவை வயதானவர் போல காட்ட கூடியது. இதற்கு தீர்வு இதோ..! 5 அல்லது 6 பப்பாளி இலையை எடுத்து, நீரில் அலசி கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக நறுக்கி 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 1/4 பங்கு வந்தவுடன், வடிகட்டி குடித்து வந்தால் முகம் மிகவும் இளமையாக காட்சியளிக்கும்.
டிப்ஸ் 7 :-
வறண்ட முகத்தை இயல்பாக மாற்ற இந்த வழி இருக்கே..!
முதலில் 3-4 டீஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு, அதோடு சிறிது ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின்பு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு பாதாமை தூளாக பொடி செய்து அதனுடன் சேர்த்து கொண்டு நன்கு கலக்கி முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு தண்ணீரில் கழிவி விடவும். இவ்வாறு செய்வதால் வறண்ட முகம் மென்மையாக மாறும்.
Leave a Reply