
புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்று நடைபெறாது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தில் 20 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். எனினும், அவர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
காமினி லோகுகே, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யப்பா அபேவர்தன, காஞ்சனா விஜேசேகர, சனத் நிஷாந்தா, கனக ஹேரத், ரோஷன் ரணசிங்க மற்றும் லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு பகுதியினரும் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் தமிழ் தரப்பிலிருந்து எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன் போன்றவர்களும் அமைச்சு அல்லது பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அவை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Leave a Reply