
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
அதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு முதலாவது அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து புதிய அமைச்சரவையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த வியாழக்கிழமை 15 பேரை கொண்ட தற்காலிக அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தார்.
புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்ற சகல அமைச்சர்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
Leave a Reply