
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி பத்திரம் கிடைக்க பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தாம் கோரிய பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் அதனை திருத்திக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்த பரீட்சைகள் நான்காயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன. கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply