ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் ஏற்படும் மாற்றம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் அரச மற்றும் இராணுவ சின்னங்களை மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

நாட்டிலுள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு இராணுவ ஆளணி நிர்வாக பணிப்பகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *