
எதிர்வரும் டிசம்பர் மாதம் பதவி விலகத்திட்டமிட்டு மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இராஜினாமாக் கடிதத்தினை அவர் கடந்த 02 ஆம் திகதி சமர்ப்பித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில உள்நாட்டு மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டதால், டிசம்பர் 2 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 20 வரை இராஜினாமாவை நீட்டிக்க அவர் முடிவு செய்திருந்தார்.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அவர் பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து பதவி நீக்கப்பட பின்னர் பதினான்காவது ஆளுநராக டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி கடந்த 2016 ஜூலை மாதம் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜூன் மாதம் இராஜினாமா செய்ய திட்டமிருந்த நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் கோரிக்கை காரணமாக முடிவை மாற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply