
கடந்த அரசாங்கத்தில் பிரிவினைவாத கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமூலங்களை தடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இதற்காக எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை மக்கள் வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீதுவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களினாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதேவேளை தற்போது ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். நாம் தவறான அணுகுமுறையினை பின்பற்றி விட்டோம். எனவே புதிய அணுகுமுறையுடன் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்கின்றார்.
இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கிகொண்டு மக்கள் வாக்களிப்பார்களாயின் 113 இடங்களை கூட பெறுவது கடினமாக அமையும்.
கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ததைப்போன்று மஹிந்த ராஜபக்ஷவையும் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டை சரியான கொள்கைகளின் அடிப்படையில் கொண்டுச்செல்ல முடியும்.
அமைச்சர் சஜித் பிரேமதாச இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு உடன்பட்டதைப்போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களிடம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்.
இதனாலேயே சமஷ்டி ஆட்சியை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டார். அத்துடன் ராஜபக்ஷக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே அதிகம் முன்னெடுத்தார்.
அத்துடன் சம்பந்தன், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோருக்கு ஏற்றவாறு சட்டமூலங்களை கொண்டு வந்தார்.
பௌத்தத்துக்கு எதிராகவும் செயற்பட்டனர். இதனால்தான் இம்முறை சஜித் தேர்தலில் தோல்வியடைந்தார” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply