
மகராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய துரோகம். யார் வெற்றி பெற்றாலும் நாங்கள்தான் அரசு அமைப்போம் என்ற மனநிலையில் மத்திய பா.ஜனதா அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது.
இந்திய வங்கிகளை உலக அளவில் உயர்த்துவோம் என்கிறார்கள். முதலில் இந்திய பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் இந்திய தரத்துக்காவது உயர்த்த வேண்டும். தொடர்ந்து பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாத்தார்கள் என்றாலே போதும். அதன்பிறகு உலக தரத்தை பற்றி பேசலாம்.
முதுநிலை மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அறிவித்து இருப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply