
மகராஷ்டிரா சட்டசபையில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகராஷ்டிராவில் பா.ஜ.க, ஆட்சி அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2வது நாளாக இன்று உச்ச நீதிமன்றம் ட் விசாரணை நடத்தியது.
இதன்போது ஆட்சி அமைக்க ஆளுநர் பா.ஜ.க.,விற்கு அழைப்பு விடுத்த கடிதத்தை சட்டமா அதிபர் சமர்ப்பித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் 24 மணி நேரத்தில் அல்லது 48 மணி நேரத்தில் மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply