
அரசியல் தலைவர்களே உங்கள் அரசியலுக்காக மலையக தமிழர்களைப் பயன்படுத்தாதீர்கள் என பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் மலையக மக்களை முன்னாள் அமைச்சர் அதாவுல்லா இழிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி பேசியிருந்தார்.
இதன்போது குறித்த நிகழ்ச்சியில் மற்றுமொரு விருந்தினராக கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், அதாவுல்லா மீது குவளையில் வைக்கப்பட்டிருந்த நீரை வீசியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனது முகநூலில் ராகுல ஹிமி தேரர் இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மலையக தமிழர்களின் உழைப்பு இல்லையென்றால் இன்று இலங்கை தலை நிமிர்ந்து நிற்கமுடியாது.
மலையக தமிழர்கள் எப்போதும் சும்மா இருந்து சாப்பிடுபவர்கள் அல்ல, மலையகத் தமிழனைப் பார்த்து இழிவாக பேசுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது உங்களுக்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply