
முல்லைத்தீவு, A9 வீதி மாங்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது டிப்பர் வாகனத்தில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்தில் மூன்று பேர் மாத்திரமே பயணித்த நிலையில் அவர்கள் எந்தவித காயங்களும் இல்லாமல் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
இரண்டுவாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன். சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply