
மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு இதுவரை எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளாக மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலினை செய்கின்றோம்.
கடந்த காலங்களில் எவ்வாறான நிலை காணப்பட்டதோ ஆதே போன்றதான நிலையே இன்றும் காணப்படுகின்றது.
இன்றுவரை எவ்வித அச்சுறுத்தல்களும் காணப்படவில்லை. மக்கள் சுதந்திரமாக தமது நினைவேந்தலை மேற்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply