
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போது மலையக மக்களை தகாத வாரத்தை பிரயோகம் கொண்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இப்போராட்டம் நடைபெற்றுள்ளது
.புதிய ஜனநாயக முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அதாவுல்லாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.


Leave a Reply