
சமகால அமைச்சரவை அமைச்சர்கள் வைத்திருக்க கூடிய ஆலோசர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய அமைச்சர் ஒரு ஆலோசகரை மாத்திரமே வைத்துக் கொள்ள முடியும். அரச செலவை குறைப்பதே இதன் எதிர்பார்ப்பாகும்.
இதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் வைத்திருக்க கூடிய ஆலோசர்கள் தொடர்பில் கட்டுப்பாடு காணப்படவில்லை.
கடந்த அரசாங்கத்தின் போது சில அமைச்சர்களுக்கும் 50 இற்கும் அதிகமான ஆலோசகர்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சர்களின் ஆலோசர்களுக்காக அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply