
யாழ்ப்பாணம் -கண்டி பிரதான வீதியின் அரியாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராயன் குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய கந்தவேலு கபிஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply