
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து இன்று முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் நேற்று இரவு உயிரிழந்திருக்கலாம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட முதியவர் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கனகசபை என்பவர் என குறிப்பிடப்படுகிறது.
இவர் பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இரவு நேர காவல் தொழிலாளியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இவரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply