
தாயக விடுதலை போரில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று மாலை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, திரு உருவ படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த வீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும், சிறு நினைவுப் பொருளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டிருந்தார்.



Leave a Reply