
பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவுக்கு சொந்தமான கொழும்பு, மிஹிது மாவத்தையில் அமைந்துள்ள கட்டடத்தை அதிரடி படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தி அதிகாரிகளின் களஞ்சிய அறைகள் உட்பட கட்டடத்தின் 4 மாடிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றிய பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அளவில் ஒரு பகுதியை மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சுற்றிவளைப்பில் எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை. எனினும் இந்த சுற்றிவளைப்பினால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கடும் மன வருத்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீபின் உத்தரவுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply