ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 900 அதிகாரிகள் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும் ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *