
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞ்ஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த வழக்கு விசாரணையையே அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்தார்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் மூலம் 30 மில்லின் ரூபாயினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply