
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
சபாநாயகரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக இதன்போது கலந்துறையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சாபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்பட்டிருப்பதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply