
பிக்பாஸ் 3வது சீசனில் எல்லோராலும் வாழ்த்தப்பட்டவர் தர்ஷன். இவர் ஜெயிப்பார் என்று எதிர்ப்பார்க்கையில் வீட்டில் இருந்த எலிமினேட் செய்யப்பட்டார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது, இருந்தாலும் முகெனுக்கு டைட்டில் கிடைத்ததால் அமைதியானார்கள். தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து படங்களில் கதைகளை கேட்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
நடுவில் ஒரு பேட்டியில் தான் நடிகர் அதர்வாவை போல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள், அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க ஆசையாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அதர்வாவை சந்தித்த தர்ஷன் அவருடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதற்கு கீழ் டுவின்ஸ் என்று பல ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
Leave a Reply