
பிரான்ஸ் நாட்டில் வாழும் மாவீர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்ஸ் Nanterre பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈகைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள், உறவுகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடந்து தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் சிறப்புரையை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா ஆற்றியிருந்தார்.



Leave a Reply