
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவந்த ராபர்ட் பயாஸ், தனது மகனின் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் சென்றுள்ளார்.
ராபர்ட் பயாஸ், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை நீதிபதிகளான சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டிக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தியது.
இதன்போது விசாரணையின் நிறைவில் குறித்த அமர்வு தெரிவித்துள்ளதாவது, “ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 24ஆம் திகதி வரை ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து ராபர்ட் பயாஸ், புழல் சிறையில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தனி வான் ஊடாக சென்னை நீலாங்கரையிலுள்ள அவரது சட்டத்தரணி வீட்டுக்கு நேற்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Leave a Reply