விஸ்வாசத்திற்கு கிடைத்த முதல் விருது, ரசிகர்கள் கொண்டாட்டம்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு டி.இமானின் இசையும் ஒரு காரணம், இதில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் செம்ம வைரலானது.

அதுமட்டுமின்றி இந்த ஆல்பமே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது, தற்போது விஸ்வாசம் படத்திற்காக ஒரு விருது விழாவில் டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.

இது முதல் தான் இன்னும் நிறைய வரும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இமானுக்கு கூறி கொண்டாடி வருகின்றனர்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *