
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 போட்டியில், சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்காதது குறித்து ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.
தொடர்ந்து வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பெயர்கள் அறிக்கப்பட்டது. 15பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.
இதனால், தேர்வு குழு மீது முன்னாள் வீரர்கள் விமர்சகர்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அவர் மூன்று போட்டிகளில் தண்ணீர் பாட்டில்தான் சுமந்து சென்றார்.
அதன்பின் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை சோதிக்கிறார்களா? அல்லது அவருடைய இதயத்தையா?” என பதிவிட்டார்.
இற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு வலுவான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதில் டுவிட் செய்துள்ளார்.
Leave a Reply