
இறுதி போரின் பின்னர் நாட்டில் நல்லிணக்க ஒருமைப்பாட்டினை உருவாக்க இராணுவம் முன்னின்று செயற்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னணியில் இராணுவத்தின் எதிர்கால பங்களிப்பு அளப்பெரியது என்றும் குறிப்பதாக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை இராணுவம் மேற்கொண்டதாகவும் கூறினார்.
மேலும் போரின் பின்னர் நாட்டை கட்டியெழுப்ப இராணுவம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் நிலைமைக்கேற்ப எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவத்தில் சகல மட்டத்திலும் முழுமையான ஒழுக்கத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் எந்த சந்தர்பதிலும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply