
நாடாளுமன்ற மரபுகளை மீறி எதிர்கட்சித் தலைவர் நியமனம் இடம்பெறக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு கட்சிக்குள்ளேயே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அந்த பதிவில் “எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் எனது தீர்மானம் நிறுவப்பட்ட நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது.
அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது நாடாளுமன்ற மரபுகள் மீறப்படக்கூடாது. இதில் சவால்கள் உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கட்சியின் பிரச்சினைகள் அக்கட்சிக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
Leave a Reply