
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply