
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் குடியேறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் உட்பட எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்பதை மங்கள தவிர்த்து வருகிறார்.
கடந்த அரசாங்கத்தின் போது பௌத்தம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரினால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் அதிகாரத்தில் இல்லாமையினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசியலை விட்டு முழுமையாக விலகும் மங்கள, அமெரிக்க நாடு ஒன்றில் குடியேறவுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply