
கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் தீ ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டது.
இதன்போது தேவாலயத்தில் ஏற்றப்பட்டிருந்த விளக்கு தவறி விழுந்தே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் கட்டிடத்தின் சில பகுதிகளுக்கு மாத்திரமே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply