
கலால் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைப்பவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கையை எடுக்க நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் சுமார் 1,000 கலால் அதிகாரிகளை நேர சூசியத்தின் அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய அளவிலான கடத்தல்காரர்களைக் கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக 1913 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்றும் காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a Reply