தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ தீர்வு!

அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களுக்கு வேலைகளுக்கு குறைவிருக்காது.  எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள். முதியோருக்கு போதிய ஓய்வு தேவை என்பதை வீட்டில் உள்ளோர் உணர வேண்டும்.

குடும்பத்திலுள்ள வயதானவர்களையும், குழந்தைகளையும் சரிவர கவனிக்க வேண்டும். இதற்காகவே பெண்களாக நீங்கள் முதலில் உடற்கூறு விஷயத்தில் வலிமை (physical fitness) உடையவராக இருத்தல் அவசியம்.

ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக ‘நம் உடலை’ மறந்து போகிறோம்.

உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை வளர்கிறது. எனவே, நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

 • நீங்கள் உறங்கும் படுக்கை அதிகக் கடினமாகவோ அல்லது மிகவும் லேசாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த தேர்வு உதவும்.
 • சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
 • தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை. மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும்.
 • பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதைத் தவிர்க்கலாம்.
 • எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்கு என உடற்பயிற்சி செய்ய நேரம் செலவிடுங்கள்.
 • ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம். இதனால் உடல் தசைகள், மூட்டு இலகுவாகும்.
 • தசை இழுப்புப் பயிற்சிகள் செய்வது மிக அவசியம். (flexibility exercises). காலை எழுந்தவுடன் 10 நிமிடங்கள் இவற்றை செய்தல் மிக அவசியம்.
 • forward bending – 5 முறை
 • backward beinding – 5 முறை
 • bending the knees – 5 முறை
 • ankle movements – 5 முறை
 • wrist movements – 5 முறை
 • பெண்கள் யோகா, நடைபயிற்சி செய்தல் மிகவும் முக்கியம். இதனால் உங்கள் ஸ்ட்ரெஸ் குறையும். ஸ்ட்ரெஸ் குறைவதால் உங்கள் உடல் சீராக இயங்கும்.
 • பெண்களுக்கு முதுகு வலி என்பது உடன் பிறந்தது போலானது. முதுகு தசைப்பயிற்சி செய்வதனால், இதைக் கட்டுப்படுத்தலாம்.
 • சரியான காலணிகள் (walking shoes) அணிவதன் மூலம், முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளைத் தவிர்க்கலாம்.
 • வாரம் ஒருமுறை தசை இளகும் சிகிச்சை (massage therapy) செய்து கொள்வது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்திருக்கும்.
 • Strengthening exercises மிக அவசியம். நீங்கள் வீட்டிலிருந்தோ, ஜிம்மில் சேர்ந்தோ இதைச் செய்யலாம். உங்கள் தசை வலுப்பெற்றால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும். இதனால் உடல் வலிமை அதிகரிக்கும்.
 • எந்தளவு Strengthening exercises செய்ய வேண்டும் என அறிய உங்கள் இயன்முறை சிகிச்சை மருத்துவரிடம் (Physiotherapist) அறிவுரை பெறுவது நல்லது.
 • உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சிகளும் மிக அவசியம்.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்க்கவும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால் வலி போன்றவை ஏற்படலாம்.
 • ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறையாவது விளையாடுங்கள். உதாரணமாக நீச்சல், சைக்ளிங், கிரிக்கெட்
 • கம்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலி பயன்படுத்தவும். இதனால் உங்கள் முதுகு வலி, wrong posture, போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
 • நீங்கள் உண்ணும் உணவில் புரதச் சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
 • பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைப்பாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
 • முடிந்தவரையில் சுறுசுறுப்பாக இருங்கள். அவ்வாறு இருப்பதால் எண்டார்ஃபின் Endorphin) எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
 • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனும் ஆன்றோர் வாக்கு என்றும் ஆப்த வாக்கியம்.


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *