
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவரை சந்தித்த போது கொடுக்கப்பட்ட உணவுகள் குறித்து முதல் முறையாக கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழீழ ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை போரூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேக்கை வெட்டியதோடு, அங்கு குழந்தைக்கு பெயர் வைக்க வந்திருந்த தம்பதியின் குழந்தைக்கு, பிரபாகரனின் மனைவி பெயரை வைத்தார்.
அதன் பின் விழாவில் பேசிய அவர், போர்ச் சூழலில் நான் அங்கு சென்றிருந்தபோது நான் என்னவெல்லாம் சாப்பிடுகிறேன் என்பதை எனக்கு பின்னால் இருந்த ஒருவர் குறித்து கொண்டே இருந்தார்.
இதனால் நான் என்னெவென்று கேட்ட போது, தலைவர் பிரபாகரன் தெரிந்துகொள்வதற்காக எடுக்கச் சொன்னார் என்று சொன்னார்.
தம்பி எதை விரும்பி சாப்பிடுகிறேன் என்பதை தலைவர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாக புன்னகைத்தார். அதே போல் பொட்டு அம்மான் வீட்டிற்கு சென்ற போது அவர்கள் வீட்டில் இட்லி பரிமாறப்பட்டது.
அப்போது நான் அப்பாடா என்று கூறினேன், உடனே அவர்கள் சிரித்தார்கள் ஏன் என்று கேட்ட போது, அண்ணன் அன்றே சொன்னார் அவன் பார் இன்னும் கொஞ்ச நாளில் இடலி, தோசைக்கு வந்துவிடுவான் என்று, அதே போன்று இப்போது நீ இட்லியை பார்த்தவுடன் அப்பாடா என்று கூறியதால், சிரித்ததாக கூறினார்.
மேலும் நான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக இல்லை, இது போன்ற உண்மைக கதைகளை சொல்ல முடியும் என்பதற்காகவே தான், எனக்கு ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஒரு நட்டமும் கிடையாது.
ஆட்சியை பிடித்து முதல்வராக இங்கு வரவில்லை. இது போன்று பேசுவதற்காகத்தான் கட்சி ஆரம்பித்தேன். இன்னைக்கு பேசிவிட்டேன் நான் நிம்மதியாக துங்குவேன் என்று கூறினார்.
Leave a Reply