
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதன்போது மேலும் பல விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply